thalapathy vijay mainly focus to collect 1000 crore to create historical records in tamil cinema through his last

ரூ.1000 கோடியை அள்ளுமா தளபதி 69 – விஜய் புதிய சாதனை படைப்பாரா?

by · Kalakkal Cinema

‘கற்றது கையளவு, கல்லாதது கடலளவு’ என்பது போல.. சாதனைகளுக்கு கரையேயில்லை. அக்கறையுடன் எதிர்நீச்சல் போட்டால், எக்கரையும் கிட்டும் தானே.!

அவ்வகையில், இன்றைய பரபரப்பான எந்திர சினிமா துறையில்; தற்போது ‘பான் இந்தியா’ படங்கள், குறிப்பாக தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்கள் 1000 கோடி இலக்கை நோக்கி பாய்ந்து சென்று கொண்டிருக்க, தனது கடைசி படத்தின் மூலம் அந்த சாதனையை முறியடிக்க தளபதி விரும்புவதாக கூறப்படுகிறது.

இந்திய திரைப்பட வரலாற்றில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. தமிழகத்திலும் பாகுபலி வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூலை எட்டியது. ஆனால், இதுவரை முழுமையான தமிழ் திரைப்படம் இதுபோன்ற சாதனையை எட்டவில்லை.

எனவே, தனது படத்தின் மூலம் இந்த மைல் கல்லை எட்டி ரசிகர்களை மகிழ்விக்க அவர் விரும்புவதாக கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் வெளியான மிகப்பெரிய வெற்றிப் படமான லியோ, உலகம் முழுவதும் 620 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. ஆயிரம் கோடிக்கு மிக அருகில் வந்தது. எனவே தனது கடைசி படத்தை இன்னும் கவனமாக திட்டமிட்டால், இந்த சாதனையை எளிதில் முறியடிக்க முடியும் என்று அவர் நம்புவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். தளபதி 69 படத்தின் மூலம் 1000 கோடி இலக்கை எட்டி விஜய்க்கு மேலும் ஒரு மிகப்பெரிய வெற்றியை அவர் தேடித் தருவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அக்டோபர் 4ஆம் தேதி ‘தளபதி-69’ படம் பூஜை போடப்பட்டு, நேற்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தற்போது பையனூரில் பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. அந்த பாடல் காட்சியில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த பாடல் காட்சிக்கு சேகர் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படமானது தெலுங்கு சினிமாவில் நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் திரைக்கு வந்த ‘பகவந்த் கேசரி’ கதைதான் விஜய்க்காக மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க அரசியல் பின்னணி கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில், விஜய் அரசியல்வாதியாக நடிப்பதாக நம்பத் தகுந்த வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த நிலையில், தளபதி விஜய் நதி போல ஓடிக் கொண்டிருக்கிறார். ஆம்..

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’

  • என்று குறள் உணர்த்துவது போல, உலகில் பிறப்பால் அனைவரும் சமம். செய்யும் தொழிலின் திறமைகளால் மட்டுமே வேறுபாடு காண முடியும்..!