தளபதி விஜய்யின் ‘கோட்’ மோதிரம் வைரலாகிறது: பரிசளித்தது யார் தெரியுமா?
by Suresh Valmeki · Kalakkal Cinemaகொட்டுப்பட்டாலும் மோதிர விரலால், கொட்டுப்படணும்னு சொல்வாங்க. அதுபோல, இன்று ‘கோட்’ என பொறிக்கப்பட்ட மோதிரத்துடன் தளபதி விஜய் போஸ் கொடுத்தது டிரெண்டிங் ஆகி வருகிறது. எப்டின்னா..
தளபதி விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆன திரைப்படம் கோட். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருந்தது என்பது தெரிந்ததே.
கோட் படம் உலகளவில் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. கோட் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தளபதி 69 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்துடன் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுகிறார்.
விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது கேவிஎன் நிறுவனம்.தமிழில் தயாரிக்கும் முதல் படம் தளபதி 69 தான். இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பாபி தியோல் என பலர் நடிக்கின்றனர்.
தளபதி-69 படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற இதன் பூஜையில் நடிகர் விஜய் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். பூஜையின் போது நடிகர் விஜய்க்கு மோதிரம் ஒன்றும் பரிசாக கிடைத்திருக்கிறது.
‘கோட்’ பட வெற்றிக்காக அந்த மோதிரத்தை தயாரிப்பாளர் டி.சிவா, விஜய்க்கு பரிசாக அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் ‘கோட்’ படத்தில் விஜய்யுடன் நடித்தும் இருந்தார். ‘கோட்’ என எழுதப்பட்ட அந்த மோதிரத்தை அணிந்தபடி நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான், தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டிங் ஆக உள்ளது.
இன்று, விஜய்யின் இறுதிப்பட பூஜை நாளில்..’ எந்த வேர்வைக்கும், வெற்றிகள் வேர் வைக்குமே..’ என வாழ்த்துவோமே.!